districts

img

தொழிலாளர் உடலை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி, ஜூலை 2- நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (58). கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் ஜூன் 26- ஆம் தேதி திடீரென்று மாய மானார். இதுகுறித்து அவரது குடும்பத்தி னர் காவல்துறையில் புகார் செய்ததன் பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.  இந்நிலையில் வெள்ளியன்று மாயாண்டி தச்சநல்லூர் அருகே சிதம்பரம் நகர் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  இதில் சம்பவத்தன்று மாயாண்டியுடன் கறிக்கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. அவர் மாயாண்டியுடன் சேர்ந்து மது அருந்திய தும், அப்போது குடிபோதை தகராறில் அவர்  மாயாண்டியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். அதன்பேரில் அந்த வாலிபரை பிடித்து, அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை மாயாண்டியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உற வினர்கள் கரையிருப்பு பகுதியில் போராட் டத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமையன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.  இரண்டாவது நாள் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை தாலுகா செயலாளர் துரை நாராயணன், பாளையங்கோட்டை செயலாளர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினர்.

;