districts

img

குளங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 3- மண்பாண்ட தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட குளங்களிலிருந்து களிமண், குறுமண் எடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அனுமதி வழங்கிட கேட்டு நாகர்  கோவிலில் உள்ள கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம், மண் பாண்ட தொழிலாளர் சங்கம் சார்  பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில் விதொச வட்டாரச் செய லாளர் கே.ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன், செயலாளர் மலைவிளை பாசி, சிபிஎம் வட்டா ரத் தலைவர் எஸ்.மிக்கேல், விவ சாயிகள் சங்க வட்டாரச் செயலா ளர் சி.சுப்பிரமணியம், சிஐடியு  கன்வீனர் எஸ்.சக்திவேல் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆட்சியர் நடவடிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு மனு கொடுக்க சென்ற சங்க  நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரி டம் உடனடியாக தலையிடவும், போர்க்கால அடிப்படையில் மண்  எடுக்க அனுமதி அளிக்கவும் வலி யுறுத்தினர். அதன்படி கோட் டாட்சியர் மற்றும் கனிம வள உதவி இயக்குநர் ஆகியோர் குளங்களை ஆய்வு செய்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.