districts

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருநெல்வேலி, ஜூலை 1- கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை முதல் நெல்லை திருச்செந்தூர், நெல்லை- செங்கோட்டை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  நெல்லை- திருச்செந்தூர் முன்பதி வில்லாத சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நெல்லை  வந்தது. இதற்கிடையே மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12. 05 மணிக்கு ஒரு ரயில் புறப்பட்டு நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு சென்றது. அந்த ரயில் மீண்டும் மதியம் 2 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு 4.05 மணிக்கு மணியாச்சிக்கு சென்றது. இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினா விளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளை யங்கோட்டை ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்றது. இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதி வில்லா சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை சென்றது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதி வில்லாத சிறப்பு ரயில் செங்கோட்டை யில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை வந்தது.இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை சென்றது. இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக் குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக் குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர் சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  மதுரை - செங்கோட்டை முன்பதி வில்லாத சிறப்பு விரைவு ரயில் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை வந்தடைந் தது. மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு மதுரை சென்றது. இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருது நகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோ வில், பாம்புகோவில் சந்தை, கடைய நல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 2 ஆண்டு களுக்கு பிறகு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

;