districts

img

வண்ண ஓவியங்கள்- பூங்காக்களால் புதுப்பொலிவுடன் மாமல்லபுரம் நகரம்

மாமல்லபுரம், ஜூலை 5- மாமல்லபுரத்தில் வருகிற 28 ஆம் தேதி முதல் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி தொடங்கு கிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ள 188 நாடுகளில் இருந்து வெளிநாட்டு செஸ்  வீரர்கள் உள்பட 2,500 பேர் வர உள்ளனர். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களையும் சுற்றிப் பார்க்கிறார்கள். இதையடுத்து மாமல்லபுரம் நகரம் புதுப்பொலிவு பெரும் வகையில் பணி கள் நடந்து வருகின்றது. சுவர், பூங்கா, சிற்பங்கள், கடைவீதி, கோயில், குளம்,  சாலை, நுழைவு வாயில் என  அனைத்து பகுதிகளையும் அலங்கா ரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பூங்காக்களில் நீர் அலங்காரம், சுவர்களில் தமிழ் பாரம்பரிய, வர லாற்று, சரித்திரங்களை நினைவு படுத்தும் வகையில் இயற்கையுடன் இணைத்து தத்ரூபமாக வண்ண ஓவியங்கள் படங்கள் வரையப்பட்டு வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம். ஆர் சாலையோரம் செஸ் ஒலிம்பி யாட் விளம்பர பேனர், சின்னங்கள் வைக்கப்படுகிறது. சாலையின் நடுவே பலவகை அலங்கார செடிகள்  வைக்கப்பட்டு வருகிறது. சாலை யோர விதிமுறை குறியீடுகள் போர்டு கள் அனைத்தும், வெளிநாடுகளில் இருப்பது போன்று மாற்றப்பட்டு வரு கிறது. இதனால் மாமல்லபுரம் புது பொலிவுடன் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. இது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

;