districts

img

கழுகேர்கடையில் பட்டியலின மக்களை தனிமைப்படுத்த எழுப்படுகிறதா சுவர்?

சிவகங்கை, ஜன.5- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கழுகேர்கடை கிராமத்தில் பட்டியல் வகுப்பினர் வசிக்கும் பகுதியை சுற்றி சுவர் எழுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழுகேர்கடை கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் வீடு கட்டி வசிக்கின்றனர். இந்த நிலையில் பட்டியலின மக்கள் குடி யிருக்கும் வீடுகளுக்கு அருகே சில தனிநபர் கள் (ரியல் எஸ்டேட்) ஊரைச் சுற்றி எழுப்பு வதற்கு முயன்றுள்ளனர். மக்கள் போராட்டத் தால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செய லாளர் தண்டியப்பன், ஒன்றியச் செயலா ளர் அய்யம்பாண்டி, நகர் செயலாளர் ஈஸ்வ ரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்ட பலர் கிராமத்திற்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன் கூறியதாவது: பட்டியலின மக்கள் பள்ளமான பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழும் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டால் மழை பெய்தால் ஓடிவரும் தண்ணீர் குடி யிருப்பைப் பாதிக்கும். அரசு புறம்போக்கு நிலத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். கால்வாய்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்புவனம் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகிய வர்களிடம் மனுக் கொடுத்து தங்களது பாதிப்பை தெரிவித்திருக்கிறார்கள் .ஆனால் அதிகாரி கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. ஆட்சியர் தலையிட்டு சுற்றுச்சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என் றார்.