திருநெல்வேலி, பிப். 14- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சிபிஎம் தேர்தல் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் திறந்துவைத்தார், இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ,மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், விகே புரம் நகராட்சி 19 வது வார்டு சிபிஎம் வேட்பாளர் இசக்கிராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகர குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்