districts

img

திண்டுக்கல் மேயர் வேட்பாளராக திமுகவின் இளமதி அறிவிப்பு

திண்டுக்கல், மார்ச்.3- திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுக வைச் சேர்ந்த இளமதி அறி விக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியான 23-ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட இவர் பி.பி.ஏ பட்டதாரி யாவார். இவருக்கு வயது 42 ஆகும்.  இவரது கணவர் ஜோதிபிர காஷ் வடமதுரையில் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தில் செயலாளராக உள்ளார். இவ ருக்கு அரவிந்த், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளன. துணை மேயர் இதே போல் திமுக நகரச் செய லாளரும் 32-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ச. ராஜப்பா துணை மேயர் வேட்பா ளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 56 வயதான இவர் 3வது முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  இவருக்கு விமலா என்ற மனைவியும், இமானுவேல், கார்முகிலன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.