districts

img

9 மீனவர்கள் இராமேஸ்வரம் திரும்பினர்

இராமேஸ்வரம், ஜன.10- இலங்கை கடற்படையின ரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரில் 9 பேர் தாய கம் திரும்பினர்.  இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் 19 ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்ட இராமநாத புரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜனவரி 5 (புதனன்று) மன்னார் நீதிமன்றம் மண்டபத்தைச் சேர்ந்த 12 மீன வர்களையும் விடுவித்தது. ஆனால், அவர்கள் பயன்படுத் திய படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அரசு டமையாக்கியது. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களில் 9 பேர் திங்களன்று தமிழகம் வந்த னர். அவர்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.