districts

img

முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 9 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.19-  புதுக்கோட்டை மாவட்  டம் முக்கணிப்பட்டியில் வியாழக்கிழமை நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில் 438 காளைகள் பங்கேற்  றன. காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர். முக்காணிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடி அசைத்து  தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினர் வை.முத்துராஜா  அவர்கள், வருவாய் கோட்  டாட்சியர் முருகேசன், வட் டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டி யில் 438 காளைகள் பங்கேற்  றன.  113 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுத் தலைவர் மற்றும் கண்காணிப்பு அலு வலர் எஸ்.கே.மிட்டல் முக்கா ணிப்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியினை நேரில் பார்  வையிட்டு ஆய்வு செய்தார். போட்டிகளில் வெற்றி  பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் காளைகள் முட்டி  யதில் 9 பேர் காயமடைந்த னர்.  அவர்களுக்கு அங்கு முகாமிட்டு இருந்த மருத்து வக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஒரு வர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார்.