திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ் தலைமையில் இரண்டாவது நாள் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது. கலசபாக்கம், ஆதமங்கலம் புதூர், காஞ்சி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பயணகுழுவினர் பிரச்சாரம் செய்தனர். பின்னர் செங்கம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சரவணன், சி.முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எம்.சிவக்குமார், பி.சுந்தர், சிபிஎம் வட்டாரச் செயலாளர் எ.லட்சுமணன் உள்ளிட்ட பலர் பேசினர்.