districts

img

தத்தனூர் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு: கிராம மக்கள் 300 பேர் ஆட்சியரகம் முற்றுகை

திருப்பூர், டிச. 4 - அவிநாசி தொகுதி தத்தனூர்  பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க எதிர்ப்புத் தெரி வித்து அந்த சுற்று வட்டார கிராம  மக்கள் 300 பேர் திருப்பூர் மாவட்ட  ஆட்சியரகத்தை முற்றுகையிட் டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப் பார் ஆகிய மூன்று ஊராட்சிக ளுக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி நிலங்களைக் கைய கப்படுத்தி 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் அளவை செய்து, கையகப்படுத்துவதற்கான பூர் வாங்கப் பணிகள் நடைபெற்று  வருவதாக கூறப்படுகிறது. இச்சூ ழலில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் தொழிற்சாலை கழிவுகளும், சாயக்கழிவுகளும் வெளியேறி கிராமத்தின் நீராதாரம், சுற்றுப்புறச் சூழல், விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கும். கிராம மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை  ஏற்படும் என அப்பகுதி விவசாயி கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். மேலும்,  இது தொடர்பாக சட்டமன்ற சபாநாயகர்  அலுவலகம் முற்றுகை, ஊராட்சி மன்றங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ள னர்.

இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஆகிய மூன்று ஊராட்சி மன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நி லையில், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் 300 பேர் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து,  ஆட்சியரை நேரில் சந்தித்து சிப்காட் அமைக்கக்  கூடாது என  கோரிக்கை மனு அளிக்க முயன்ற னர். ஆனால், ஆட்சியரக நுழைவா யிலிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், ஆட்சியர் அமைச்சர் நிகழ்ச்சிக்காக உடுமலைப்பேட்டைக்குச் சென்று விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சியரகம் முன் புள்ள சாலையோரம் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.  இந்நிலையில், ஊராட்சி மன்றத்  தலைவர்கள், கிராம முக்கிய பிரமு கர்கள் மட்டும் ஆட்சியரகத்தின் உள்ளே சென்று அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கும்படி காவல் துறையினர் கூறினர். எனினும், தொடர்ந்து காத்திருந்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், மக்க ளின் கருத்துகளுக்கு ஏற்ப சிப்காட்  திட்டம் அந்த கிராமத்தில் வராது  என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

;