districts

img

கடைகளை அடைக்க சொல்லி இந்துமுன்னணி கும்பல் மிரட்டல்

 நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இந்துக்களை அவதூறாக பேசியதாக உண்மைக்கு மாறாக கூறி கடைகளை அடைக்க சொல்லி மிரட்டி கடைகளை அடைக்க செய்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் உள்ளடங்கிய தொகுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கூட்ட  உள்ளரங்கில் மனுதர்மம் குறித்து பேசியதை இந்து முன்னணி அமைப்பினர்  இந்துக்களை தவறாக பேசியதாக கூறி செப்டம்பர் 20ஆம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர், பெரியார் ,அம்பேத்கர் உள்ளிட்ட அமைப்பினர் கடைகளை திறக்க கோரியும், இந்து முன்னணி அமைப்பிடமிருந்து பொதுமக்கள் ,வணிகர்களுக்கு  பாதுகாப்பு வழங்க கோரி காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சூழலில் மோடி ஆட்சியில் ஏற்பட்டிருக்கும்  பொருளாதார பின்னடைவை மறைப்பதற்கு  தவறான தகவல்களை பரப்பி  மக்களை திசைதிருப்ப இந்து முன்னணி முயன்று வருகிறது என திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் வியாபாரிகளிடம், பொதுமக்களிடமும், நோட்டீஸ் விநியோகம் செய்தனர். 

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல  தேநீர் கடைகள், மளிகை கடைகள் , திறந்து கொண்டிருந்தபோது இந்து முன்னணி அமைப்பினர் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கடைகளை அடைக்கக் கோரி, கடையின் முன்புறம் வைத்திருந்த மளிகை பொருட்களை இந்து முன்னணி அமைப்பினரே கடையின் உள்புறம் எடுத்து வைக்க தொடங்கினர். அத்துடன் வலுக்கட்டாயமாக கடைகளை அடைக்கும்படியும் மிரட்டினர். இதனால் செய்வதறியாமல் கடை உரிமையாளர்கள்  கடைகளை அடைக்க துவங்கினர்.

 இதன் தொடர்ச்சியாக நம்பியம்பாளையம் கிராமம் ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள திமுக பிரமுகர் லோகநாதன் மளிகை கடை, மற்றும் தேநீர் கடைகளை அடைக்க சொல்லி  இந்து முன்னணியினர் மிரட்டினர்.  இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதே போல் ராமநாதபுரம் திமுக ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வரும் இளையராஜா  கருவலூரில் பூக்கடைக்கு நடத்தி வருகிறார். இக்கடையின் முன்பாக இந்து முன்னணி பாஜக பிரமுகர்கள் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக பேசி உள்ளனர். வன்முறையை தூண்டியிருக்கின்றனர். இதையடுத்து  இளையராஜா பூக்கடையை அடைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

 அவிநாசி பேரூராட்சி பகுதியில் அன்னமயி உணவகத்தை கடையை அடை இந்து முன்னணி அமைப்பினர் முற்பட்டபோது, சம்பவ இடத்திற்கு காவலர் வந்ததைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதே போல் கடையை அடைக்க மறுத்த பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கா நகர் பகுதியில் மளிகை கடையை இந்து முன்னணி அமைப்பினர் சூறையாடினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 

 கருவலூர் ஊராட்சி பகுதியில் கருத்து கேட்பு என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவை எடுக்கும்படி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோவை எடுத்து வீட்டிற்கு சென்றனர்.

அதிகாலை நேரத்தில் இந்து முன்னணியினர் தேநீர் கடைகள் வணிகர்களை கடையடைக்கும் படி ரகளை ஈடுபட்டு கடை அடைக்க வைத்துள்ளனர். இதன்பின்பு காலை 10 மணிக்கு மேல் காவல்துறையினர். இந்து முன்னணி மற்றும் பாஜக அமைப்பினர் கடைவீதிகளில்  வந்து கொண்டிருந்தபோது, 17 நபர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில்,  பனியன் கம்பெனி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கினர் தொழிலாளிகளும் வேலைக்குச் சென்றனர்.

;