districts

img

முறைகேடான குடிநீர் இணைப்பு பணிகளை   தடுத்து நிறுத்திய சிபிஎம் கவுன்சிலர்கள்

திருமுருகன் பூண்டியில் முறைகேடான குடிநீர் இணைப்பு பணிகளை சிபிஎம் கவுன்சிலர்கள் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர். 

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி நகராட்சியில், 22வது வார்டு ரிங் ரோடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்குக் குடிநீர் இணைப்பு தேவைப்படுபவர்கள் முறையாக நகராட்சி நிர்வாகத்திற்கு வைப்புத் தொகை செலுத்தி உரிய அனுமதி பெற வேண்டும். 

ஆனால் நகராட்சி ஊழியர்கள் சிலர் பெரும் செல்வந்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அரசு விதிமுறைகளுக்கு மாறாக அவர்களின் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், பார்வதி சிவக்குமார், 22வது வார்டு ரிங்ரோடு பகுதியில் முறைகேடாக சுமார் 300 மீட்டர் அளவு கொண்ட 3 இஞ்ச் குழாய் மூலம் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெறுவதை நேரில் ஆய்வு செய்து உறுதிப் படுத்தினர். 

இதையடுத்து  நகர மன்ற ஆணையர்க்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அப்போது ஆணையர் மேற்கொண்ட ஆய்விலும் முறைகேடான குடிநீர் இணைப்பு என்பது உறுதியானது. இதையடுத்து குடிநீர் இணைப்பு பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டது. 

இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பலசுப்பிரமணியம் சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம் ,பார்வதி சிவக்குமார் ஆகியோர் இணைப்பு வழங்கிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தர்.  இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அதிகாரிகள்  அளித்தனர். இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;