திருவாரூர், டிச.25- வர்க்கப் போரில் உயிர்நீத்த வெண் மணி தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளில் திங்களன்று செங்கொடி கொடி யேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் வெண்மணி தியாகிகள் 55 ஆம் ஆண்டு நினைவு செங்கொடி ஏற்றப் பட்டது. கொடியை கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஏற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.சேகர், எம்.கலைமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி. பழனிவேல், எஸ்.தம்புசாமி, நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சௌந்தர ராஜன், மூத்த தோழர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாலிபர் சங்கம்
வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், வாலி பர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி, கச்சனம் கடைத் தெருவில் இருந்து துவங்கியது. பேரணிக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித் தார், அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரும், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினருமான பி.கந்தசாமி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ் உள்ளிட்ட பலர் வெண்மணி தியாகிகள் நினைவிடம் நோக்கி சென்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மண்ணச்சநல்லூர் வாழ் மால்பாளையம் கடைவீதியில் வெண் மணி தியாகிகள் தின தெருமுனை கூட்டம் மற்றும் கட்சி நிதி அளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது. கூட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக் குழு நல்லையன் தலைமை வகித்தார். திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தும், வாழ்மால்பாளையம் கிளையில் வழங்கிய முதல் தவணை நிதியை பெற்றுக் கொண்டும் சிறப்புரை ஆற்றினார்.
தஞ்சாவூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகரக் குழு சார்பில், தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன் செங் கொடி ஏற்றினார். மாவட்டக் குழு உறுப் பினர் என்.குருசாமி வீரவணக்க உரை யாற்றினார். கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றி யம், வீரக்குறிச்சி, சுக்கிரன்பட்டி கிளை களின் சார்பில், ஒன்றியக் குழு உறுப்பி னர் கு.பெஞ்சமின் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கிளையின் மூத்த தோழர் பாக்கியம் வெண்மணி தியாகிகள் நினைவுக் கொடியை ஏற்றினார்.
12 பேர் கட்சியில் இணைந்தனர்
பூதலூர் வடக்கு ஒன்றியம், திருச் சென்னம்பூண்டி புதுப் பாலம் தெரு வில், வெண்மணி நினைவு தின கொடி யேற்று நிகழ்வு நடைபெற்றது. கட்சி யின் பூதலூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் எம். ரமேஷ் கொடியேற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி தலைமையில், புதிதாக 12 பேர் கட்சியில் இணைந்தனர்.
கரூர்
கரூர் ஒன்றியத்தில் கட்சியின் சார்பில் செங்கொடியேற்றி வெண் மணி தினம் கொண்டாடப்பட்டது. மறவாபாளையம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சியின் புகளூர் கட்சி அலுவ லகத்தில் தோகை முருகேசன் கொடி யேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் வெண் மணி தின வரலாறு குறித்து பேசினார். ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், கரூர் ஒன்றியக் குழு மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.