புதுக்கோட்டை, ஏப்.13 - ஊழலை பற்றிப் பேச பாஜகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன். புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி யின் மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற பிரச்சாரங்களில் அவர் பேசியதாவது: தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், அதிமுக இந்தத் தேர்தலில் அமைப்பு ரீதியாக-கட்சி ரீதியாகவே தோல்வி யடைந்திருக்கிறது. தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை ஒன்றிய அரசு கைது செய்திருக்கிறது. அவருக்கு எதி ரான எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராகப் பேசுவதாக மோடி காட்டிக் கொள்கிறார். ஆனால், தேர்தல் பத்திர விவகாரத்தில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார். கொரோனா காலத் தில் பிஎம் கேர்ஸ் நிதி என்ற பெயரில் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார். மத்திய தணிக்கைத் துறையின் ஆய்வில் ரூ.7.5 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தி யிருப்பதாகக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. எனவே இவர்கள் ஊழலைப் பற்றிப் பேசவே முடியாது. கச்சத்தீவை மீட்போம் என தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சி யில் இருந்தவர்கள் கச்சத்தீவுக்காக செய்தது என்ன என்பதை சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் வெள்ளப் பாதிப்புகள் வந்த போது வராத பிரதமர், இப்போது தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறார். இந்த முறை பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. 150 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறவே முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.