districts

img

தஞ்சை முன்னாள் எம்.பி., கு.பரசுராமன் காலமானார்

தஞ்சாவூர், பிப்.6-  தஞ்சாவூர் முன்னாள் மக்களவை  உறுப்பினர் (எம்.பி.) கு.பரசுராமன் (63) உடல்நலக் குறைவு காரண மாக சென்னையில் செவ்வாயன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரஹ்மான் நகரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். கடந்த 1985 ஆம் ஆண்டு அதிமுக வில் சேர்ந்த இவர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலராக இருந்தார். தஞ்சாவூர் அருகேயுள்ள நீலகிரி ஊராட்சி மன்றத் தலை வராக 2001 ஆம் ஆண்டு முதல்  தொடர்ந்து 3 முறை இருந்தார். பின்னர்  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மக்கள வைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த  2021 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து  விலகி திமுகவில் இணைந்தார்.  இதய நோயால் பாதிக்கப்பட்ட இவ ருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரசுராமன் செவ்வாயன்று காலமானார்.  இவரது இறுதி ஊர்வலம் இவரு டைய இல்லத்தில் இருந்து புதன்கிழமை  பிற்பகல் 3 மணியளவில் நடைபெற வுள்ளது. இவருக்கு மனைவி விஜய லட்சுமி, மகள் பல்லவி, மகன் பவித்ரன்  உள்ளனர்.