districts

img

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

தருமபுரி, ஆக. 8 – தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தருமபுரியில் சிறப்பு மருத்துவ முகாம் மற் றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளியன்று நடைபெற்றது. தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள அறிஞர் அண்ணா கைத்தறி நெசவா ளர் தொழிலியல் கூட்டுறவு சங்க வளாகத்தில்  கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கைத் தறி உதவி இயக்குனர் சூர்யா தலைமை யில் நடைபெற்ற நிகழ்வில், பேரூராட்சி மன்ற  தலைவர் பிருந்தா மற்றும் திமுக ஒன்றிய  செயலாளர் வீரமணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர். கைத்தறித் தொழிலை மேம்படுத்தவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த் தவும் கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நெசவா ளர்களுக்கு ரூ. 6,03,000 மதிப்பிலான சேமிப்பு  மற்றும் பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது. மேலும், வயது முதிர்ந்த நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணைகள் உள் ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங் கப்பட்டன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சுமார் 200 கைத்தறி நெசவாளர்க ளுக்கு முழுமையான மருத்துவப் பரிசோ தனைகள் செய்யப்பட்டு, தேவையான ஆலோ சனைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் சண் முகம், முன்னாள் கைத்தறி நெசவாளர் சங்க  தலைவர் திருவேங்கடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பி னர் விஸ்வநாதன், மற்றும் பல்வேறு உள் ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள், சங்க  நிர்வாகிகள், நெசவாளர்கள் எனப் பல ரும் கலந்துகொண்டனர். விழாவில் மூத்த  கைத்தறி நெசவாளர்கள் கௌரவிக்கப்பட்ட னர்.