districts

திருச்சி முக்கிய செய்திகள்

யோகா விழிப்புணர்வு

பாபநாசம், ஜூன் 28 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் விவேகா னந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் யோகா  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு விவே கானந்தா சமூக கல்வி  சங்கத் தலைவர் தேவ ராஜன் தலைமை வகித் தார். செயலர் கண்ணதா சன் யோகாவின் நன்மை கள் குறித்து கூறி, பயிற்சியளித்தார். மகளிர் சுய உதவிக் குழு பெண் கள், களப் பணியாளர் கள், தையல் பயிற்சி  மாணவிகள் பங்கேற்ற னர்.

ஆயத்த கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- நலவாரிய பணப்  பயன்களை முறைப் படுத்தி வழங்க கோரி ஜூலை 16 அன்று மாநி லம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது.  இதையொட்டி கட்டு மான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச் சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு சங்க  மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமை  வகித்தார். சிஐடியு புற நகர் மாவட்டச் செயலா ளர் சிவராஜ் துவக்க உரையாற்றினார். சங்க  மாவட்ட துணைச் செய லாளர் ராஜா முகமது, மாவட்டச் செயலாளர் பூமாலை, சிஐடியு மாவட்டத் தலைவர் சம்பத் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

201 கிராம ஊராட்சிகளில்  சிறப்பு கிராம சபை கூட்டம்

அரியலூர்,  ஜூன் 28 - அரியலூர் மாவட்டத் திலுள்ள 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில், கலைஞர் நினைவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடு களுக்கான பழுது பார்க்கும் திட்டத்தில் பய னாளிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு விண் ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தாமரைக் குளம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு  அதன் தலைவர் ந. பிரேம்குமார், எருத்துக் காரன்பட்டியில் தலைவர் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் தலை வர் மா.முருகேசன், ஓட்டக்கோவில் ஊராட்சி யில் தலைவர் செங்க மலை, வாலாஜா நக ரத்தில் தலைவர் அபிநயா  இளையராஜா, வாரணா வாசியில் ராஜேந்திரன், ராயம்புரத்தில் தலைவர் ராஜகுமாரி அறிவழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பிரதி நிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து  கொண்டனர்.

கள்ளச் சாராய சம்பவத்திற்கு கண்டனம் சிபிஎம் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

கும்பகோணம், ஜூன் 28 - கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் போதைக்காக வேதிப் பொருட்களை கலந்து விஷ சாராயம்  தயாரித்து விற்கப்பட்ட நிலையில், அதை குடித்த 60-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் கவலைக்கிட மான நிலையிலும், நூற்றுக்கணக்கானோர் தீவிர சிகிச்சை பிரி விலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்திருந்தாலும், அடிப்படையில் அப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதற்கு துணைபோன அரசியல்வாதி மற்றும் அதிகாரிகள் அனைவர் மீதும் பார பட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம், திருச்சேறை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வியாழனன்று மாலை கண்டன போராட்டம் நடை பெறும் என  அறிவிக்கப்பட்டது. அதற்கு சட்டரீதியான அனுமதிக்காக அப்பகுதிக்குட்பட்ட நாச்சியார் கோவில் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு  வழங்கப்பட்டது. ஆனால் நாச்சியார்கோவில் காவல் நிலைய  ஆய்வாளர் சுகுணா, “இதற்கு அனுமதி இல்லை. நீங்கள் போராட்டம் நடத்தக்கூடாது” என தெரிவித்தார். மேலும் கள்ளச் சாராயம் சம்பந்தப்பட்ட போராட்டத்திற்கு அனுமதி இல்லை  என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், நியாயமான கோரிக்கைக்காக போராடு வதற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஏன் என்றும், இதன்  பின்னணி என்ன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் பயிற்சிக் கட்டணம் ரூ.350

புதுக்கோட்டை, ஜூன் 28- அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது:  அரசு இசைப் பள்ளியில் நிகழ்வாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. பயிற்சிக் கட்டணம் ரூ.350. அரசுச் சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும் மற்றும் இலவசப் பேருந்து சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித்தொகை அரசு விதிகளின்படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி புல எண்.29/70, வசந்தபுரி நகர், நரிமேடு, சமத்துவபுரம் வழி, புதுக்கோட்டை - 622 005 என்ற முகவரியில் தலைமையாசிரியரை நேரில் அணுகவும். மேலும் விபரங்களுக்கு 04322-225575,  9486152007 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை ஜூலை 1 இல் தாக்கல்: ஆட்சியர்

தஞ்சாவூர், ஜூன் 28-  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட  வேட்பாளர்கள் தங்களது முழுமையான தேர்தல் செலவின  கணக்குகளை ஜூலை 1 அன்று தாக்கல் செய்ய உள்ள தாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர்,  ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளடங்கிய தஞ்சாவூர் நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்க ளது முழுமையான தேர்தல் செலவின கணக்கு விபரங்களை  ஜூலை 01 ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள அறை  எண் 1-இல் தாக்கல் செய்ய உள்ளனர். வேட்பாளர் வாரியாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல்  செலவினக் கணக்கு விபரங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மணப்பாறையில்  ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை  பணியாளர்கள் சங்க கிளை துவக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க கிளை துவங்கப்பட்டது. இதில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். துவக்க விழாவிற்கு புறநகர் ஊரக உள்ளாட்சித் துறை  சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை  வகித்தார். சிபிஎம் மணப்பாறை வட்டச் செயலாளர் கோபா லகிருஷ்ணன், சிஐடியு மணப்பாறை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் சங்க  பொறுப்பாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்  தலைவராக எம்.ரெஜினா மேரி, செயலாளராக டி.அனிதா,  பொருளாளராக ஏ.விக்டோரியா சகாயராணி, துணைத் தலைவர்களாக ஏ.கலா, எஸ்.அந்தோணியம்மாள், துணைச் செயலாளராக டி.இளங்குடி, ஆர்.தங்கமணி உள்பட 7 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் ரெஜினா மேரி நன்றி கூறினார்.

தைல மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 28 - நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் விதமாக புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ்பதி என்னும் தைல மரக்காடு களை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் ஐ.சா.மெர்சி  ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுசாமி பேசுகையில்,  “விராலிமலை ஒன்றியம் தொண்டைமான் நல்லூர் கிரா மத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நிலம் வழங்கப்பட்டது. நிலம் வழங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி  செய்துவரும் அவர்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிமளம் ஒன்றியம் உட்பட புதுக்கோட்டை மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் ஆர்எஸ்பதி என்ற  தைல மரங்கள் பயிரிடப்படுகின்றன. நிலத்தடி நீரை வெகு வாக பாதிக்கும் தைல மரக்காடுகளை முழுவதுமாகவும், உடனடியாகவும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

மாணவர்கள் போதைப் பொருள்களைப்  பயன்படுத்தக் கூடாது!:  நீதிபதி அறிவுரை

புதுக்கோட்டை, ஜூன் 28 - மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, அத்துடன் போதைப் பொருள்களுக்கு எதிராக மாண வர்கள் செயல்படவும் வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு  நீதிபதியுமான டி.ராஜேந்திர கண்ணன். புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள அரசு மாதிரிப்  பள்ளி வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து  அவர் பேசுகையில், “போதைப் பொருட்களை பயன்படுத்து வது அவரவரின் உடல் நலனுக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத் தின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும். மாணவர்களின் கல்வி,  வேலைவாய்ப்பு போன்ற எதிர்காலமே பாதிக்கப்படும். எனவே, மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன் படுத்தவே கூடாது. அத்துடன் போதைப் பொருட்களுக்கு எதி ராகவும் மாணவர்கள் செயல்பட வேண்டும்” என்றார். வழக்குரைஞர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை உதவி யாளர் கே.மணிமேகலை நன்றி கூறினார். கீரனூரில்... கீரனூர் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின சட்ட விழிப்புணர்வு பேரணி  புதன்கிழமை நடைபெற்றது. சார்பு நீதிபதி சி.ராஜேஷ் தலைமை வகித்தார். நீதித்துறை நடுவர் எம்.முருகானந்த் முன்னிலை வகித்தார். பேரணியில் வழக்குரைஞர்கள் மற்றும் முகாம்பிகை பொறியியல் கல்லூரி, சீனிவாசா தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போக்குவரத்துக் கழகத்தில்... தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியேற்பு புதன் கிழமை நடைபெற்றது. துணை மேலாளர் (வணிகம் மற்றும்  தொழில்நுட்பம்) எம்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

விவசாயிக்கு மின் இணைப்பு தர அதிகாரிகள் உறுதி
சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், ஜூன் 28 -  விவசாயிக்கு மின் இணைப்புத் தர அதி காரிகள் உறுதி அளித்ததால், விவசாயிகள் சங்கத்தின் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கத் தவறிய உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அதே  பகுதியில், உயர்திறன் கொண்ட மின்  மாற்றியை அமைக்காமல் காலம் கடத்தும்  மின்சாரத் துறையை கண்டித்தும், ருத்திர சிந்தாமணி ஊராட்சி சீகன்காடு கிராமத்தில்  ராமையன் என்ற விவசாயிக்கு ஆழ்துளை  கிணற்றுக்கு மின் இணைப்பு வேண்டி தட்கல் முறையில் பணம் செலுத்தி 6 ஆண்டுகள் கடந்த நிலையில் மின் இணைப்பு வழங்காத  மின்வாரியத்தை கண்டித்தும், உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் ரெட்டைவயல் கடைவீதியில் ஜூலை 2  அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை வட்டாட் சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தெய் வானை தலைமையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.  இதில், சரக வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வேந்திரன், காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோ, மின்வாரிய அதி காரிகள் ஆகியோர் அரசு தரப்பிலும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் சார்பில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில் குமார் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பி. பெரியண்ணன், சகாபுதீன் மற்றும் நிர்வாகி கள் பங்கேற்றனர்.  இதில், மேலமணக்காடு கிராமத்தில் உயர் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பயன் பாட்டுக்கு வரும். இனிமேல் விவசாயிகளின்  வயல்களுக்கு மும்முனை மின்சாரம் கிடைப் பதில் பிரச்சனை இருக்காது எனவும், குடி நீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்ப டும் எனவும், ஜூலை 10-க்குள் விவசாயி ராமை யனுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என வும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.  இதை ஏற்று ஜூலை 2 ஆம் தேதி நடை பெறவிருந்த சாலை மறியல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்த னர்.

;