திருவாரூர், டிச.5 - திருவாரூர் மாவட்டம் கல்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் சி. ராஜமாணிக்கத்தின் தந்தை மூத்த தோழர் கே.சிவசாமி செவ்வாய்க்கிழமை கால மானார். அவருக்கு வயது 90. தோழர் சிவசாமியின் மறைவு செய்தி அறிந்த சிபி எம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.எஸ்.கலிய பெருமாள், பி.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் என். ராதா, மாவட்டக் குழு உறுப் பினர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி செவ்வா யன்று மாலை நடை பெற்றது.