கரூர், பிப்.4 - மாணவர்களை அழகிய சிற்ப மாக உருவாக்கும் அறப்பணி களை செய்பவர்கள் ஆசிரியர்கள் என்று கவிஞர் மதுக்கூர் இராம லிங்கம் தெரிவித்தார். கடந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர் களுக்கான பாராட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தனி யார் பள்ளி கல்வித்துறை கூட்ட மைப்பு சார்பில் சனிக்கிழமை கரூரில் நடைபெற்றது. விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ்.நாகராஜமுருகன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் எல்.சுமதி வரவேற்றார். கொங்கு கல்வி அறக்கட்டளைத் தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பட்டிமன்ற நடுவர் கவிஞர் மதுக்கூர் இராம லிங்கம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், “நீங்கள் எந்த அளவிற்கு மொழிகளை கற்றுக் கொள் கிறீர்களோ அதை அனைவருக்கும் கற்றுக்கொடுங்கள். ஒரு மொழி யைப் படித்தால், ஒரு விளக்கு நம் கையில் இருப்பதாக அர்த்தம். ஆனால் நம் தாய்மொழியாகிய தமிழ் இருவிழிகளைப் போன்றது. விழி திறந்தால்தான் விளக்கினால் பயனடைய முடியும். பாறை போன்று வரும் மாண வர்களை, அழகிய சிற்பமாக செதுக் கும் அறப்பணியை மேற்கொள்ப வர்கள் ஆசிரியர்கள். நீங்கள்தான் மாணவர்களின் ரோல் மாடல். தமிழகத்தில் ஆசிரியர்கள் மிகவும் போற்றப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளை இந்த வகுப்பறை எனும் கருவறைக்குள் அடை காத்து, இந்த சமூகத்திற்கு பொறுப் புள்ள மனிதர்களை அனுப்பும் அறப்பணிகளை மேற்கொள்ளும் இன்னொரு தாயாக திகழ்கின்ற னர் ஆசிரியர்கள்” என்றார். விழாவில் சேரன் கல்விக் குழும தாளாளர் பாண்டியன், பரணி கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன், முதன்மை முதல் வர் சொ.ராமசுப்ரமணியன், சேரன் பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் உட்பட பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர்.