அரியலூர், அக்.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து சின்ன வளையம் மெயின் ரோட்டு தெரு மற்றும் அங்காளம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிக்கவும் சமைக்கவும் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வராததால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடமும்,முதல்வரின் தனிப்பிரி விற்கும், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அலுவலகங் களுக்கு மனு அளித்தும் இது நாள் வரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஜெயங்கொண்டம் காவல் சார்பு ஆய்வாளர் நடேசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.