மயிலாடுதுறை, நவ.27 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகேயுள்ள ஆறுபாதி ஊராட்சி யில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆறுபாதி ஊராட்சி ஈஸ்வரன்கோவில் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் இணைக் கும் வகையில், ஈஸ்வரன் கோவில் - குளிச்சார் கிராமங்களை இணைக்கும் 200 மீட்டர் நீள முள்ள இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சீர மைக்கப்படாததால் மண் சாலையாகவே உள்ளது. இரண்டு கிராமத்திற்கும் பலமுறை சாலை வசதி ஏற்படுத்தி செப்பனிடப்பட்டா லும், இந்த 200 மீட்டர் இணைப்புச் சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டது. இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகி, பொதுமக்கள் கடும் அவதிய டைந்து வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் 200 மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைக்க அரசுத்துறை அதிகாரிகள் முன்வர வில்லை. சேறும் சகதியுமான சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. சைக்கிளை கையில் தூக்கிக் கொண்டு, நடந்து சென்று சாலையை கடக்கும் நிலை உள்ளது. மழைநீர் தேங்குவதால் வீடு களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷஜந்து கள் புகுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குளிச்சார் கிராமத்திலிருந்து ஆறுபாதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு வரும் மாணவர்கள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சேறும் சகதியு மான சாலையில் நாற்று நட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். 200 மீட்டர் தூர சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.