புதுக்கோட்டை, ஆக.4 - குழந்தைகளின் படைப்பு களைக் கொண்டாட வேண்டும் என பேச்சாளர் கவிதா ஜவஹர் தெரிவித் தார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வியாழக் கிழமை ‘நோக்கும் திசை யெல்லாம் நூலின்றி வேறில்லை’ என்ற தலைப் பில் அவர் பேசியதாவது: தஞ்சாவூரில் ஒரு பழக்கடைக்காரர் தன்னிடம் தொடர்ந்து பழம் வாங்கும் வாடிக்கையாளருக்கு புத்தகங்களை இலவச மாகக் கொடுக்கிறார். நிலக் கோட்டையில் ஒரு நகைக் கடைக்காரர், அவருக்குப் பிடித்த எழுத்தாளரின் பிறந்த நாளில் நகை வாங்கு வோருக்கு சலுகை கொடுக் கிறார். தூத்துக்குடியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையில் நிறைய புத்தகங் களை வைத்து வாடிக்கையா ளர்களைப் படிக்க வைக் கிறார். ஒரு தீவிர வாசிப்பா ளன், தொழில் செய்பவனாக இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இவர்கள் அனைவரும் எடுத் துக்காட்டு. ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் திறமை களை அவருக்குப் புரிய வைத்துவிட்டால், அவரை விட மகத்தானவன் இருக் கவே முடியாது என்றார் ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ். மாச்சரியங்கள் இல்லாத உலகில் வாழ்பவர்கள் குழந் தைகள். அவர்கள் வரையும் படங்களில் வீடு இருக்கும். அதன் ஒரு புறம் சூரியன், இன்னொரு புறம் நிலா, கீழே நதி, மேலே மலை என எல்லாமும் இருக்கும். அத்தகைய குழந்தைப் படைப்பாளர்களை நாம் கொண்டாட வேண்டும். குழந் தைகளுக்கு நல்ல நூல் களைக் கொடுத்து வாசிக்க வைக்கும் முயற்சியை மேற் கொண்டால், பின்னாளில் அது பெரும் பயனை இச்சமூ கத்துக்கு கொடுக்கும். இவ்வாறு அவர் பேசி னார். தொடர்ந்து கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை யில், சுழலும் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் நேசன் மகதி, சாமி கிரிஷ், கீதாஞ்சலி மஞ்சன், மைதிலி கஸ்தூரி ரெங்கன், ந.ரேவதி ஆகியோர் பங்கேற்றனர்.