districts

img

நாகப்பட்டினத்தில் 3 ஆவது புத்தக திருவிழா

நாகப்பட்டினம், ஆக.18 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா அரசினர்  தொழிற் பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி யது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆக.16 முதல் 26 வரை மூன்றாவது புத்த கக் கண்காட்சி நடைபெறுகிறது. நூற்றுக் கும் மேற்பட்ட அரங்குகள், கோள ரங்கம், உணவு அரங்குகள், மூலிகை  கண்காட்சி, சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், அரசு  துறை சார்ந்த அரங்குகள், பகல் பொழுதில் செல்லப்பிராணிகளின் அணிவகுப்பு, உடற்பயிற்சி விளை யாட்டுகள், ஆணழகன் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களு டன் மூன்றாவது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. புத்தக கண்காட்சியை மாவட்ட  ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தொடக்கி வைத்தார். தொடக்க விழா வாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் 30 சிறுகதை களை தொகுத்து “முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் சிறப்பு சிறுகதையுடன் கூடிய நாகப்பட்டினம் மாவட்ட எழுத்தா ளர்களின் சிறுகதை தொகுப்பு” நூல் வெளியிடப்பட்டது.  நூல் வெளியீட்டு விழாவில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர்  வை.செல்வராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பேபி, தாட்கோ  தலைவர் உ.மதிவாணன், தமுஎகச மாவட்டத் தலைவர் ஆவராணி ஆனந் தன், நாகை நகர் மன்ற தலைவர் இரா.  மாரிமுத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஊடகவியலாளர் நீயா நானா கோபிநாத் சிறப்புரை ஆற்றினார். 11 தினங்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி, திரைக்கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான ரோகிணி, கு. ஞானசம்பந்தம் பட்டிமன்றம், பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் அறிவுமதி, கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் சூர்யா  சேவியர், முனைவர் சு.அரிமளம் பத்ம நாபன். சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா,  கலைமாமணி முனைவர் நர்த்தகி நட ராஜ், ஈரோடு மகேஷ், கவிஞர் யுக பாரதி, புதுகை பூபாளம் கலைக்குழு அருள்பிரகாஷ், மோகனசுந்தரம் ஆகி யோர் கலந்து கொள்கின்றனர்.  தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகளை நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாவட்ட  கல்வி தன்முனைப்பு திட்டம், தென் னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், தமிழ் நாடு அறிவியல் இயக்கம், இல்லம் தேடி  கல்வி திட்டம் ஆகியவை ஒருங்கிணைக் கின்றன.