புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒடுகம்பட்டி, கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம் ஆகிய பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வழங்கினார். விழாவிற்கு மாவட்டக் கல்வி அலுவலர் ஏ.ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.