அறந்தாங்கி, அக்.14 - கடந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால், புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு நிவார ணம் வழங்கியது. ஆனால் இந்தாண்டு, பயிர் காப்பீடு செய்துள்ள பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை. பயிர் காப்பீட்டை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மண மேல்குடியில் மறியல் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பி னர் கரு.இராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சி.சுப்பிரமணி யன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசா யிகள் மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பயிர் காப்பீடு குறித்து அக்.17 அன்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.