திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ போட்டியிடுகிறார். இதையொட்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி வெண்மணி இல்லத்தில் தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரேணுகா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றிக்கு பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.