districts

மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை, ஆக.16-

    மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பி னர் சு.திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  

   இக்கூட்டத்தில், பிரதம மந்திரி ஸ்வாநிதி தெருவோர  வியாபாரிகளுக்கான உதவித் திட்டம், வாழ்ந்து காட்டு வோம் திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோர்  மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்  படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்க ளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், ஒன்றிய, மாநில அரசின் மூலம் மேற்கண்ட திட்டங்களுக்காக வழங்கப்படும் மானிய நிதி உதவிகள்  குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

     மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஐ.ஓ.பி. மண்டல மேலாளர் சுந்தரகிருஷ்ணன், ஆர்.பி.ஐ. துணை  மேலாளர் ரமேஷ், நபார்டு வங்கி மேலாளர் தீபக்குமார்,  மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் எஸ்.திரிபுர சுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும்  வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.