districts

img

சிறுவாச்சூரில் மதி அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

பெரம்பலூர், ஆக. 8- பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் அருகில் மகளிர் திட்டம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ்  வெள்ளிக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி விற்பனை பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினை பொருட்கள், ஜுட் பேக், அலங்கார நகைகள், வயர் கூடை. பூஜை கூடை, நாட்டுச் சர்க்கரை, செயற்கை ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும். இன்று திறக்கப்பட்டுள்ள அங்காடியை மகளிர் சுய உதவி விற்பனை பிரதிநிதி முறையாக பராமரித்திட வேண்டும் என தெரிவித்தார்.  இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கோபாலகிருஷ்ணன், மகளிர் திட்ட, உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.