districts

img

தோழர் கே.கலியமூர்த்தி படத்திறப்பு

கும்பகோணம், செப்.1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம் ஆரியச்சேரி மூத்த தோழர் கே. கலியமூர்த்தி படத்திறப்பு பொதுக்கூட்டம், தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆரியச்சேரி யில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச்  செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மறைந்த  தோழர் கலியமூர்த்தியின் மகன் நாகையன், கிளைச் செயலாளர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்த  னர்.  தோழர் கே.கலியமூர்த்தி படத்தையும், கல்வெட் டையும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் மற்றும் தோழமை கட்சியினர் புகழஞ்சலி செலுத்தினர்.