districts

img

கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அறந்தாங்கி நவ.10 -  புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தாலுகா, துரையரசபுரத்தில் இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளர்களாக சுமார் 240 பேர் வேலை செய்து வரு கின்றனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நியா யமான தீபாவளி போனஸ் வழங்க  வலியுறுத்தி வியாழன் மற்றும் வெள் ளிக்கிழமைகளில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜின்னா, செயலாளர் ஸ்ரீதர், சிஐடியு பஞ்சாலை சங்க நிர்வாகிகள் அலா வுதீன், கர்ணா மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் 250 பேர் இரவு-பகலாக மழையில் ஆலை முன்பாக தொடர் போராட்டம் நடத்தினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவி வர்மன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னர். வெள்ளியன்று ஆலை நிர்வாகத் துடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் யில்  அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவ குமார், அறந்தாங்கி வட்டாட்சியர் ஜபருல்லா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், ஆலை  நிர்வாகம் சார்பாக சென்ற ஆண்டு  கொடுத்த போனசுடன் ரூ.500 கூடுத லாகவும், பண்டிகை கால முன்பணம் ரூ.5000, இனிப்பு, சீருடை ஆகியவை உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று, சிஐடியு நிர்வாகிகளும், நூற்பாலை தொழிலாளர்களும் போராட்டத்தை நிறைவு செய்தனர். பின்னர் போனஸ், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள், உரிமை களை பெற்றுக் கொடுத்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் உறு துணையாக இருந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உதயம் சண்முகம்,  திமுக ஒன்றியச் செயலாளர் பொன். கணேசன் ஆகியோருக்கு நன்றி தெரி வித்தனர்.