மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திரபாடி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா தலைமை வகித்தார். சந்திரபாடி ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினர். முகாமில், எம்எல்ஏ நிவேதா முருகன் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.