அறந்தாங்கி, செப்.29 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இளை ஞர்களால் மாட்டு வண்டிபந்தயம் நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தது. பெரிய மாட்டு பிரிவில் 15 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில் 32 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு 45 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. இந்த பந்தயத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பண மும் கேடயம் வழங்கப்பட்டது.