districts

img

நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேர் கைது

பெரம்பலூர், செப். 4-  பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு புதன்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையில்  அரசலூர், ஈச்சங்காடு, பகுதியில் உள்ள செல்வராஜ் மகன் அலெக்ஸாண்டர் என்பவரின் காட்டுக் கொட்டகையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலெக்ஸாண்டர் மற்றும் அலெக்ஸாண்டர் தனசிங், ஜான் ஜோசப் ஆகிய மூவரும் புலியூர் காப்புக்காட்டை ஒட்டிய பட்டா நிலங்களில் 2 நாய்கள் மூலமாக வேட்டையாடிய 2 பெண் புள்ளி மான் மற்றும் ஒரு காட்டுப்பன்றியை வெட்டி கூறு போட்டு, கறியை விற்பனைக்காக தயாராக வைத்திருந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த வனத்துறையினர் கைது செய்து, மூவருக்கும் தலா ரூ.1,50,000 வீதம் ரூ.4,50,000 இணக்க கட்டணமாக வசூல் செய்தனர். வரும் காலங்களில் இதுபோன்ற வனக்குற்ற வழக்கு மற்றும் வன உயிரினக் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.  வன விலங்குகளை வேட்டையாடுவதை போன்றே, விலைக்கு வாங்கி சமைத்து உண்பதும், வன உயிரினச் சட்டத்தின் படி தண்டனைகுரிய குற்றமாகும். இதுபோன்ற வன உயிரினங்கள் வேட்டை, விற்பனை குறித்த தகவல்கள் கிடைப்பெற்றால் அருகில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.