districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிபிஎம் உறுப்பினர்  அட்டை வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 24 - திருச்சி புறநகர் மாவட்டம், துறையூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங் கும் சிறப்பு பேரவை ஞாயிறன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் பேசி னார். புறநகர் மாவட்டச்  செயலாளர் ஜெயசீலன் கட்சி உறுப்பினர் களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பு ரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் கட்சி யின் மூத்த தோழர்கள் காசிராஜன், பொன்னுச் சாமி, ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் மற்றும்  சிஐடியு அரங்க பொறுப் பாளர் சிவானந்தம், மாற்றுத்திறனாளி சங்க மாவட்டத் தலைவர் ரவி, கிளைச் செயலாளர் சரசு மங்களம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி

அறந்தாங்கி,  ஜூன் 24 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஆசிரி யர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவம் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை மண மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழி யன் தொடங்கி வைத்தார்.  மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்  அமுதா  மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஒன்று முதல் 3 ஆம்  வகுப்பு வரை கற்பிக்கிற  அனைத்து ஆசிரியர் களுக்கும், எண்ணும் எழுத்தும் பயிற்சி பாட வாரியாக தமிழ் மற்றும்  ஆங்கிலம் ஆகிய பாடங் களில் வழங்கப்பட்டது. கருத்தாளர்கள் தாமஸ் கிங், சரஸ்வதி, பெல்சியா, ரஹ்மத் பேகம் ஆகி யோர் பயிற்சி அளித்தனர்.

பள்ளத்தில் இறங்கிய மினி பேருந்து: 10 பேர் காயம்

பாபநாசம், ஜூன் 24- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தி லிருந்து, பள்ளியக்கிர ஹாரம் வழியாக மினி  பேருந்து ஒன்று கோவத் தக்குடி நோக்கி ஞாயி றன்று இரவு சென்றுக் கொண்டிருந்தது.  மினிப் பேருந்து உதா ரமங்கலம் துரைபடுகை அருகே சென்றுக் கொண் டிருந்த போது, எதிர் பாராத விதமாக சாலை யோரத்தில் இருந்த  பள்ளத்தில் இறங்கியது.  இதில் மினி பேருந்தி லிருந்த அபர்ணா, லதா, முருகையன், வினோதா உள்ளிட்ட 10 பேர் காய மடைந்தனர். காயம டைந்த 10 பேரும் 108  ஆம்புலன்ஸ் மூலம்  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைக்கப்பட்ட னர்.  இதுகுறித்து மெலட்டூர்  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமுற்று சிகிச்சை பெற்றவர்களை கொத்தங் குடி ஊராட்சித் தலைவர் பழனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

செம்பனார்கோயில் ஊராட்சி  ஒன்றிய குழு கூட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 24 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக்குழு தலை வர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  ஒன்றியக் குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி  அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்த ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகை யில், “தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தார்ச் சாலை அமைத்து தர வேண்டும் என்று பெரும்பான்மையான ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று தார்ச்சாலை அமைத்து தரப்படும்” என்றார்.

1,200 கிலோ ரேஷன் அரிசி  பறிமுதல்: ஒருவர் கைது

1,200 கிலோ ரேஷன் அரிசி  பறிமுதல்: ஒருவர் கைது தஞ்சாவூர், ஜூன் 24 - வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியைக் காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகேயுள்ள வங்காரம்பேட்டையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் காவலர்கள் சனிக்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சைக்கிளில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டையைக் கொண்டு செல்வது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது, அப்பகுதியிலுள்ள வீட்டின் பின்புறம் 1,200 கிலோ ரேஷன் அரிசியை 24 மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பதும், இவற்றை தஞ்சாவூர் கரந்தை, பள்ளியக்ரஹாரம் பகுதிகளில் மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணை, இட்லி மாவு அரைப்பவர்களிடம் அதிக விலைக்கு விற்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் அருகே மாத்தூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த தீபக்கை (23) காவல் துறையினர் கைது செய்தனர்.

ஜூன் 28 தஞ்சையில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், ஜூன் 24-  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் ஜூன் 28 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக்  ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங் கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி  முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள  வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை  கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக் களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு ஓட்டுநர்-நடத்துநர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

அரியலூர், ஜூன் 24 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்தை, கடலூர் மாவட்டம் ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்  (32) என்பவர் ஓட்டினார். அதில், நடத்துநராக அழகா புரம் மேலத்தைச் தெருவைச் சேர்ந்த சுசேந்திரன் (33) பணி யில் இருந்தார்.  பேருந்தில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பய ணித்துக் கொண்டிருந்தனர். அப்போது உத்திரக்குடி கிரா மம் அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே ஒருவர்  குடிபோதையில் நின்று கொண்டு பேருந்தை நிறுத்தி யுள்ளார். பேருந்து நிற்காமல் சென்றதால், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து உள்ளார். இதில், பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவ ரான இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த அருள்  என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கண்ணாடியை உடைத்தவர்களை பார்ப்பதற்காக, பேருந்திலிருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கிய போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை தகாத  வார்த்தைகளால் திட்டி, தாக்கியது. மேலும் இதனை வீடியோ எடுத்த 2 பேரின் இரண்டு செல்போன்களையும் பறித்து சாலையில் போட்டு உடைத்துள்ளனர்.  இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று, பேருந்து ஓட்டுநர்-நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்ட  4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசா ரித்தனர். அதில், அவர்கள் கும்பகோணம் ரெங்கர் தெருவைச்  சேர்ந்த கலைபாரத் (22), மணிகண்டன் (22), சத்ய ராஜ் (எ) ஜான் (23), நாகராஜன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்  பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம், அறந்தாங்கி அரசு கல்லூரிகளில்  2 ஆம் கட்ட கலந்தாய்விற்கு அழைப்பு

கும்பகோணம்/அறந்தாங்கி, ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2024-2025 ஆம் கல்வியாண்டு, இளநிலை மாணவர் சேர்க்கைக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 வரை நடை பெறுகிறது. ஜூன் 26 (புதன்) அன்று 239-லிருந்து 221  வரை கட் ஆப் மதிப்பெண் பெற்று இக்கல்லூ ரிக்கு விண்ணப்பித்தவர்களும், ஜூன் 27  (வியாழன்) அன்று 220-லிருந்து 200 வரை கட்  ஆப் மதிப்பெண் பெற்று விண்ணப்பித்தவர் களும், ஜூன் 28 (வெள்ளி) அன்று இளநிலை  தமிழ் மற்றும் ஆங்கிலம் பயில முறையே தமிழ் பாடத்தில் 69-லிருந்து 50 வரை பெற்ற வர்களும், ஆங்கிலப் பாடத்தில் 59-லிருந்து 40  வரை பெற்று (சுழற்சி இரண்டு உட்பட) இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனக் கல்லூரி முதல்வர் அ. மாதவி அறிவித்துள்ளார். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு  செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்கி ஜூன் 29 (சனிக்கிழமை) வரை நடைபெறு கிறது. இதில், பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி  இயற்பியல், பி.எஸ்.சி கணிதம், பி.காம் வணி கவியல் மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாக வியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.  மாணவர்கள் அசல் மற்றும் 3 பிரதி நகல் சான்றிதழ்களுடன் காலை 10 மணியளவில் கலந்தாய்வில் கலந்து  கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் பேரா வீ.பாலமுருகன் அறிவித்துள்ளார்.

நூறு நாள் வேலை வழங்குக! ஜூன் 28 திருவாரூரில் ஊராட்சி  அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு திருவாரூர், ஜூன் 24- நூறு நாள் வேலைத்திட்ட பணி களை, உடனே மாவட்டம் முழுவதும் துவங்கிட வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பாக, திருவாரூர் மாவட்டத்தில் 200 இடங்களில் ஜூன் 28  ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என நீடாமங்கலத்தில் நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டம் தீர்மானித்து உள்ளது. கூட்டத்திற்கு அமைப்பின் மாவட் டக் குழு உறுப்பினர் சரவண சதீஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் பி.கந்தசாமி சிறப்புரை யாற்றினார். இதில் மாவட்டப் பொரு ளாளர் ஆறு. பிரகாஷ் மற்றும் மாவட்ட,  ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். 2005 ஆம் ஆண்டு இடதுசாரிகள் ஆதரவோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (நூறு நாள் வேலைத் திட்டத்தை) கொண்டு வந்தது. இதன் விளைவாக, இந்தியாவில் இருக்கிற கிராமப் புறங்களில் மண் சார்ந்த வேலைகள், வாய்க்கால் வெட்டு தல், கண்மாய்கள் தூர்வாருதல், புதர்களை அழித்தல், மரம் நடுதல்,  கிராமப்புறத்தில் புதிய சாலைகளை  அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு  பணிகளில் விவசாயத் தொழிலா ளர்கள் ஈடுபட்டு வந்தனர். அதற்கான நிதியை ஐக்கிய போக்கு கூட்டணி அர சாங்கம் ஒதுக்கியது. ஆனால் பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு, இந்த திட்டத்தை முடக்கும்  வகையில், கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாக நூறு நாள் வேலைத் திட்டத் திற்கான நிதியை குறைத்தது. மேலும்,  வேலை செய்தவர்களுக்கு முழுமை யான கூலியை வழங்காமல் தாமதம் செய்தது. மண் சார்ந்த வேலைகளை தவிர்த்து, கட்டுமான வேலைகளுக்கும் இந்த நிதியை மடைமாற்றம் செய்தது ஒன்றிய பாஜக அரசு.  இச்சூழலில் இந்த நிதி ஆண்டிற் கான நூறு நாள் வேலை ஏப்ரல் 1 ஆம்  தேதி துவங்கியிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை துவங்கப்படா மல் இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள்  விவசாயத்தை நம்பி இருக்கிற மாவட் டங்கள். விவசாயத் தொழில் இல்லை என்றால், விவசாயத் தொழிலாளிக்கு வேலை இல்லாத சூழல் ஏற்படுகிறது.  இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான  குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. விவசாயத் தொழிலாளி களுக்கு வேலை இல்லாத காலங்க ளில், அவர்கள் வாழ்க்கைக்கு வருமா னம் கிடைக்கக் கூடிய திட்டமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இருந்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களின் அனைத்து ஊராட்சிகளிலும் உடனே நூறு நாள் பணியை துவங்க வேண்டும்.  அரசு அறிவித்திருக்கிற சட்டக் கூலி  ரூ.319-ஐ வழங்க வேண்டும். வேலை நடைபெறும் இடங்களில் தண்ணீர் வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஜூன் 28 அன்று அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன்பு, 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மது, கள்ளச்சாராய விற்பனை தகவலை தெரிவிக்காத திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தஞ்சாவூர், ஜூன் 24- மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை குறித்த தகவலை  தெரிவிக்காத திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் இரண்டு  பேர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம்  முழுவதும் காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும்  நபர்கள் குறித்து விசாரணை நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மூலம் உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. மேலும் மது விற்பனை, கள்ளச்சாராயம் குறித்த  தகவல்களை முறையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தாமல், விற்பனை செய்யும்  நபர்களிடம் மாமூல் வாங்கி கொண்டு இருக்கும் காவல்துறை யினர் குறித்து தனிப்பிரிவு காவல்துறையினர் கண்கா ணித்து, இடமாற்றம் செய்வதும் நடந்து வருகிறது.   அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலர் இளங்கோவன், எழுத்தர் சிவா ஆகிய இருவரும் திடீரென  ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் காவல் சரக பகுதியில் போலி  மதுபானம் தயார் செய்த கும்பலை தனிப்படை காவல்துறை யினர் பிடித்தனர். மேலும், கள்ளத்தனமாக மது விற்பனை நடத்தும் கும்பலிடம் மாமூல் வாங்கிக் கொண்டு உயர் அதிகாரி களுக்கு தகவல் அளிக்கவில்லை என்ற தகவலை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உறுதி செய்த  பிறகு, காவலர்கள் சிவா, இளங்கோவன் ஆகிய இருவரும்  இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.