districts

img

தொலைந்து போன இலக்கிய மன்றங்களை மீட்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் தமுஎகச தஞ்சை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 19 - தஞ்சாவூர் முற்போக்கு எழுத்தா ளர்- கலைஞர்கள் சங்கத்தின் 15  ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை யன்று தஞ்சையில் தொடங்கியது. தஞ்சாவூர் தென்னகப் பண் பாட்டு மையத்தில் இசைத்தமிழ் சிறப்பு பொது மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர்  இரா. விஜயகுமார் வரவேற்புரை யாற்றினார். சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் களப்பி ரன் எழுதிய ‘இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்’ என்னும்  சிறுபிரசுரத்தை தமுஎகச மாநிலத்  தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் வெளியிட, பாரத் கல்விக்குழுமத்தின் செயலர் புனிதா கணேசன் பெற்றுக் கொண்டார். அதேபோன்று இரா.விஜயகுமார் எழுதிய “பாய்வதற்குக் காத்தி ருக்கும் பாசிசம்” என்னும் சிறு பிர சுரமும் வெளியிடப்பட்டது. இவற் றைத் தொடர்ந்து மதுக்கூர் ராம லிங்கம் உரையாற்றினார். இசைத்தமிழ் மாநாட்டில் மாநில  செயற்குழு உறுப்பினர் கவிஞர்  நா.முத்துநிலவன் தொடக்கவுரை யாற்றினார். களப்பிரன் மாநாட்டின் நோக்கவுரையை விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தஞ்சையும் இசைத்தமிழும் என்ற அமர்வில் முனைவர் சண்முக. செல்வ கணபதி, இராகங்களான தமிழ்ப் பண்கள் என்ற அமர்வில் முனைவர் கோ.ப.நல்லசிவம், இசைத் தமி ழுக்கு கிறித்தவம் மற்றும் இஸ்லாத் தின் பங்களிப்பு என்ற அமர்வில் முனைவர் அருட்சகோதரி மார்கிரேட்  பாஸ்டின், இசைத் தமிழின் வேர்கள் என்ற அமர்வில் முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், மக்களிசை என்ற அமர்வில் நிகழ்த்திசை கலைஞர் பூபாளம் கா.பிரகதீஸ்வரன், திரை  இசை என்ற அமர்வில் கவிஞர் யுக பாரதி, அமைப்பும் இசையும் என்ற அமர்வில் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் உரை யாற்றினர். மாவட்டப் பொருளாளர் முருக. சரவணன் நன்றி கூறினார். முன்னதாக கரிசல்குயில் கிருஷ்ண சாமி, தஞ்சை தமிழ்வாணன் ஆகி யோர் இசைப்பாடல்களைப் பாடினர்.  வீணை பா.தேவி யசோதா, ரம்யா ஆகியோர் வீணை வாசித்தனர்.  இலங்கை எழுத்தாளர் டேனியல் படைப்புகளுக்கு அஞ்சலி செலுத்திய  பிறகு மாநாட்டின் 2 ஆம் நாள் பகுதி  தொடங்கியது. மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி, தி.தனபால், ஆயி ராசு, கா.பக்கிரிசாமி, பிம்பம் சாகுல் தலைமை வகித்தனர்.  தஞ்சை மாநகரச் செயலாளர் எஸ்.எல்.ஸ்ரீதர் வரவேற்றார். கும்பகோ ணம் மாநகரச் செயலாளர் கா.அசோக் குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தஞ்சை மாநகர துணைத் தலைவர் கவிஞர் தஞ்சை இனியன் கவிதை வாசித்தார்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் தொடக்கவுரையாற்றினார். மாவட் டச் செயலாளர் இரா.விஜயகுமார் பண் பாட்டு அறிக்கை, மாவட்டக்குழு உறுப்பினர் சுனந்தா சுரேஷ் கலை இலக்கிய அறிக்கை, மாவட்ட துணைத் தலைவர் பி.சத்தியநாதன் வேலை அறிக்கை, மாவட்டப் பொரு ளாளர் முருக.சரவணன் வரவு-செலவு  அறிக்கை வாசித்தனர்.  பின்னர் புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் சங்கத் தின் புதிய தலைவராக சா.ஜீவ பாரதி, செயலாளராக இரா.விஜய குமார், பொருளாளராக முருக.சர வணன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இதில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் 15 பேர் உட்பட  41 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு  செய்யப்பட்டது.  தமுஎகச பொதுச் செயலாளர் கவி ஞர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரை ஆற்றினார். தஞ்சை மாநகர பொரு ளாளர் த.சுந்தானந்தன் நன்றி கூறி னார்.  “தமிழகத்தில் பல பள்ளிகளில் தொலைந்து போன இலக்கிய மன்றங் களை மீண்டும் தொடங்கி, பேச்சுப்  போட்டி, கட்டுரை, கதை, கவிதைப்  போட்டிகளைப் போன்ற நிகழ்வு களை மாணவர்களிடையே கட்டாயம்  நடத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும். அரசு  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் விளையாட்டு, நீதிபோதனை என வகுப்புகள் இருப்பது போல, வாரம் ஒருமுறை தமிழிசை வகுப்பு கள் நடத்தப்பட வேண்டும். இவ்வகுப்பில் தமிழிசை, நாட்டுப் புற இசை, கிராமிய நடனங்களைக் கற்றுத் தரலாம். கலைகளைக் கற்றுக் கொள்வது ஒருபுறம் எனினும், மாணவர்களின் மன இறுக்கத்தை குறைப்பதற்கும், அவர்களின் மெல்லுணர்வுகளைத் தக்க வைக்க வும் இவ்வகுப்புகள் பயன்படும்.

மாநகராட்சியால் ஆக்கிரமிப்பு களிலிலிருந்து மீட்கப்பட்டு வரும் இடங்கள் ஏதாவது ஒன்றில் இலக்கிய,  கலாச்சார விழாக்கள் மட்டும் நடத்து கிற வகையில் குறைந்த கட்டணத் தில் பயன்தருகிற ஓர் அரங்கம் கட்டித் தர, தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை நக ராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  புத்தக விற்பனை நிலையம் அமைக்க  இடம் ஒதுக்கி தர வேண்டும்.  பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆபிரகாம் பண்டிதர் சிலை நிறுவ வேண்டும். ஆபிரகாம் பண்டிதரை நினைவு கூறும் வகையில்  ஆண்டுதோறும் இசைத்தமிழ் மாநாட்டை தமிழக அரசு சார்பில் நடத்திட வேண்டும். த.மு.எ.க.ச அமைப் பின் ஒட்டுமொத்த படைப்பாளர்க ளின் நூல்களை ஆண்டுதோறும், தமிழக அரசு நூலகங்களுக்காக குறைந்தபட்சம் 1000 பிரதிகள் வாங்கிட தமிழக முதல்வர் உத்தர விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக தஞ்சை மாநகர முன்னாள் தலைவர் தோழர் ப.துரை ராஜ், வி.கிறிஸ்துதாஸ், மூர்த்தி நினைவு அரங்கில், புகைப்படக் கண் காட்சியை தஞ்சை மாவட்ட போட்டோ வீடியோ கலைஞர்கள் சங்க  தலைவர் பாவா என்ற பத்மநாதன் திறந்து வைத்தார். கீழடி வரலாற்றுக் கண்காட்சியை வெற்றித் தமிழர் பேரவை இரா.செழியன் திறந்து வைத்தார். புத்தகக் கண்காட்சியை உலகத் திருக்குறள் பேரவை பழ. மாறவர்மன் திறந்து வைத்தார்.

;