districts

ஏப்.14 தமுஎகச கலை இரவு ஜெய்பீம் படத்தின் களப்போராளிகளுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் 93 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 41 ஆவது கலை இலக்கிய இரவு ஏப்ரல் 14 (வியாழன்) அன்று பட் டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் நடைபெறவுள்ளது.  நிகழ்ச்சியை ஒட்டி அன்று காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள மக்கள் கவிஞர் சிலைக்கு, மா.பன்னீர்செல்வம், தலைமை யில் அமுதா தமிழவன் மாலை அணிவிக்கிறார்.  மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத்தி லிருந்து முக்கவிஞர்களின் திருவுருவப் படங்கள் கிளை துணைத் தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார்.  சமூக நீதி போராளிகள் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம், சட்டமேதை அம்பேத்கர், அறிவுத்தந்தை பெரியார், மகாகவி பாரதி யார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி திருவுருவப் படங்க ளுக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடை பெற உள்ளது.  கலை இரவை தமுஎகச மாவட்டச் செய லாளர் இரா.விஜயகுமார் தொடங்கி வைக்கி றார். கவிக்குயில் மருத்துவர் மு.செல்லப் பன் வாழ்த்திப் பேசுகிறார்.  தொடர்ந்து கவிஞர் மதுக்கூர் இராம லிங்கம், எழுத்தாளர் - இயக்குநர் அஜயன் பாலா ஆகியோர் உரைவீச்சு, நடனம், பாடல் கள், பறையாட்டம், ஒயிலாட்டம், காவடி யாட்டம், கரகாட்டம், புதுகை பூபாளம் கலைக்குழு உள்ளிட்ட கலைநிகழ்சிகளும், கவியரங்கம், நாடகம், கதையரங்கம், ஜெய்பீம் படத்தின் களப்போராளி ஆர்.கோவிந்தன் நேர்காணல், படத்தின் நிஜப் போராளிகள், கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை பாராட்டி கௌரவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன.  ஏற்பாடுகளை கிளைத் தலைவர் முருக. சரவணன், கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, கிளைப் பொருளாளர் கா. பக்கிரிசாமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

;