புதுச்சேரி,பிப்.26- பேராசிரியர் க.பஞ்சாங் கத்தின் எழுத்துலகம் குறித்து ஆய்வரங்கம் மற்றும் பவளவிழா புதுச் சேரியில் ஞாயிறன்று (பிப்.26) நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பங்கேற்று, பவளவிழா காணும் பேரா சிரியர் க.பஞ்சாங்கத்தை பாராட்டி கவுரவித்தார். பின்னர் நடந்த ஆய்வரங்கத்தில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறு வனத்தின் முன்னாள் இயக்கு நர் முனைவர் பக்தவச்சல பாரதி, பேராசிரியர்கள் பா.ரவிக்குமார், இரா.ஸ்ரீவித்யா, தி.குமார், பா.கல்யாணி உட்பட பலர் பங்கேற்று க.பஞ்சாங்கம் தமிழியலுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து பேசினார்கள். விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், முற்போக்கு எழுத்தளார் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் நாடு மாநில செயற்குழு உறுப்பி னர் சு.ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.