districts

பாராட்டு விழா

திருச்சிராப்பள்ளி, ஜூன் 22 - அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளன துணை பொதுச் செயலா ளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஒஎப்டிஇயு மற்றும் எச்ஏபிஎப்இயு சங்கங்கள் சார்பில் தோழர் ஸ்ரீகுமாருக்கு பாராட்டு விழா செவ்வாயன்று திருச்சியில் நடை பெற்றது. விழாவிற்கு ஏஎப்டிஇயு தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். ஓஎப்டிஇயு முன்னாள் தலைவர்கள் போஸ், ரங்கநா தன், முன்னாள் பொதுச்செயலாளர் பாலச்சந்திரன், பொதுச் செயலாளர் சீனிவாசலு, ஏச்ஏபிஎப்இயு பொதுச் செயலாளர்  இரணியன் வாழ்த்துரை வழங்கினர். உலகத் தொழிற்சங்கங்க ளின் சம்மேளன துணை பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் ஏற்புரை யாற்றினார்.