கடலூர், அக்.3- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய வி.சுகுமாரன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கடலூர் நகர தொழிற்சங்கங்கள், ஆசி ரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜி. வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கூட்டமைப்பின் பொரு ளாளர் எஸ்.சிவசுப்பிர மணியன், வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.பழனி ராஜ், செயலாளர் எஸ்.ராமன், இணைச் செய லாளர் எம்.கிரிஜா, தஞ்சை கோட்டத் தலைவர் எஸ்.செல்வராஜ், ஆசிரியர் வி.எஸ்.எஸ்.ராஜன், புதிய ஆசிரியர் இதழின் ஆசிரியர் கே.ராஜூ. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அரி கிருஷ்ணன், எஸ்.மீரா, பி.கே.வி.ரமணி (வங்கி ஊழி யர் சங்கம்), எஸ்.மருது பாண்டி (மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம்), குடியிருப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்க ளின் தலைவர்கள் உரையாற்றி னர். ஓய்வு பெற்ற வி.சுகு மாரன் ஏற்புரை நிகழ்த்தி னார். முன்னதாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜெயஸ்ரீ வரவேற்றார். கிளை செயலாளர் எஸ் ஜெ.ரெஜிஸ் நன்றி கூறினார்.