districts

img

தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது

தஞ்சாவூர், மே 22-  சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவன த்தின் ஸ்டெர்லைட் ஆலையின் சுகாதார சீர்கேட்டால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி போராட்டம் நடத்திய மக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் 4-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில், தஞ்சாவூர் ரயிலடி முன்பு ஞாயிறு காலை நடைபெற்றது.  தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணை ப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார்.  நிகழ்வில், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம்,    சிபிஐ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன், மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், தெருவியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், போக்குவரத்து சங்க செயலாளர் டி.கஸ்தூரி, சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

;