2021 ஆகஸ்ட் 24, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்றதொரு நீண்ட சுதந்திர தின உரையைபிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தியிருப்பார் என்றால், அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட பாரதிய ஜனதா கட்சியின் 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கம் என்றே அதனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போதைய பதவிக் காலத்தின் பாதிவழியைக் கூட தாண்டியிராத நிலையில் அவ்வாறான நீண்ட உரையை மோடி தேர்ந்தெடுத்தது அவர் தன்னுடைய பொறுமையின் விளிம்பிற்குச் சென்றிருப்பதையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாது அதை அவர் உணர்ந்திருப்பதையும் காட்டுவதாக உள்ளது.
66 லிருந்து 24 ஆக...
தோல்வியடைந்து போன பொருளாதார வாக்குறுதிகள், தவறான பொருளாதார சீர்திருத்தங்கள், இடைவிடாதவகுப்புவாத துருவமுனைப்பு, மாற்றுக் கருத்துகளை நசுக்குவது, சுதந்திரத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை அழிப்பது ஆகியவற்றிற்கு மத்தியில் கடந்தஏழு ஆண்டுகளாக எவ்விதச் சோர்வுமின்றி தன்னைப் பற்றி சூப்பர் மேன் என்ற பிம்பத்தை உருவாக்கிடவே அவர் முயன்று வந்திருக்கிறார். ஆனால் இந்தியா டுடே வெளியிட்டுள்ள ‘தேசிய மனநிலை - 2021’ (மூட் ஆஃப் தி நேஷன்2021) என்ற கருத்துக்கணிப்பு பிரதமராக அவரை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் அறுபத்திஆறு சதவிகிதத்திலிருந்து இருபத்தி நான்கு சதவிகிதமாகக் குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆகஸ்ட் பதினான்காம் நாளை ‘தேசப் பிரிவினையின் கொடூரங்களை நினைவுகூரும் தினம்’ என்று அனுசரிக்கும் முடிவை மோடி அறிவித்திருக்கும் செயல் அவர்எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகின்றது. உண்மையில் அவருடைய அந்த அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதாகவே இருக்கிறது. லட்சக்கணக்கானவர்களின் படுகொலை மற்றும் இடம்பெயர்வைத் தூண்டிய, நம் வாழ்நாளில் மறக்கவே முடியாதநிகழ்வாக இருந்திருக்க வேண்டிய தேசப்பிரிவினை குறித்த நினைவை என்னுடைய வாழ்நாள் முழுவதும்நினைத்துப் பார்த்திடாமல் தவிர்த்தே வந்திருக்கிறேன். மோடி இப்போது அதை ஏன் நம்மிடம் நினைவுபடுத்துகிறார்?
‘பிரிவினை ஏற்படுத்திய வலியையும், வன்முறையையும் நாடு நினைவில் கொள்ள வேண்டும்’ என்று அரசாங்கத்தின் அறிவிப்பு கூறுகின்ற அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மிகவும்வெளிப்படையாக ‘தேசப்பிரிவினை நமது அரசியலில் சிலரைத் திருப்திப்படுத்துவது மற்றும் எதிர்மறை அரசியலுக்கான சூழ்நிலைகள் (வாய்ப்புகள்) ஆதிக்கம் செலுத்துவதற்கான நிலைமையை மட்டுமே உருவாக்கியது’ என்கிறார்.
இருண்ட மனதின் பார்வை
நட்டா தெரிவித்துள்ள கருத்து மோடியின் நோக்கத்தைவிளக்குவதைக் காட்டிலும் வேறுவிதமாகவே இருக்கிறது. பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்றும், சமரசம்செய்து கொள்வதை சரணடைவது என்றும் கருதுகின்ற இருண்ட மனதின் பார்வையையே நட்டாவின் கருத்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையானவற்றை முழுமையாகத் தவிர்ப்பதில் மோடியின் உறுதிப்பாடு அடுத்த மூன்றாண்டுகளில் நம்மை எங்கு இட்டுச் செல்லப் போகிறது என்பது குறித்தஎண்ணம் கிலூட்டுவதாகவே இருக்கிறது. தேசப்பிரிவினையானது இந்திய சுதந்திரம் என்பதைவலிமிகுந்த நினைவுகளை - பயங்கரத்தை - மட்டுமேநம்மிடம் தூண்டிய நிகழ்வாக மாற்றியது. ஆனாலும் அதுமகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பலவீனத்தை உள்ளடக்கியதாக அல்லது மற்றவர்களைத் திருப்திப்படுத்தியதால் உருவானதாக இருக்கவில்லை. மாறாக அந்தக் காலகட்டத்தில் அரசமைப்பு குறித்த முன்அனுபவம் எதுவுமில்லாத காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள் முடிவெடுப்பதில் மிகமந்தமாகவே இருந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் பழிபாவத்திற்கு அஞ்சாது தங்களைக் காட்டிலும் அதிகாரப் பசி அதிகம் கொண்டவர்கள் பலனை அளிக்கின்ற சமரசத்திற்கான வாய்ப்பைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் வரை தங்களுக்கிடையே சிறு சண்டைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
வாஜ்பாய், மன்மோகன்சிங்
இதை நன்கு புரிந்து கொண்டிருந்த அடல் பிஹாரிவாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் என்று இந்தியாவின்கடைசி இரண்டு பிரதமர்கள் ஒட்டுமொத்த துணைக்கண்டத்திற்கும் தேசப்பிரிவினை ஏற்படுத்திய சேதத்தைச் சரிசெய்வது என்ற நிலைமைக்கு மிகவும்நெருக்கமாக வந்து சேர்ந்தனர். ஆயினும் கடந்த ஏழு ஆண்டுகளில், அவர்கள் சாதித்த அனைத்தையும் இல்லை என்றாக்கி விடுவதில் இன்றைக்கு மோடி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் இன்றைக்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். சீனா,பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான உறவு மிகவும்பலவீனமாக இருக்கின்றது. இந்த நிலைமையில் தேசப்பிரிவினை நம்மிடம் விட்டுச் சென்ற துண்டிக்கப்பட்ட இந்தியாவானது முன்பு எப்போதும் இருந்ததை விட மிகப் பெரிய ஆபத்திலே உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. ஆக தேசப்பிரிவினையின் கொடூரங்களை நினைவுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றாலும், அது நம்மை அந்தக் கொடூரங்களுக்குள் மூழ்கடித்திட நாம் எவ்வாறு அனுமதித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கும், மீண்டுமொரு முறை நாம் அவற்றுள் மூழ்கி விடாதிருப்பதற்கும் இப்போது நாம் ‘தேசப்பிரிவினையின் கொடூரங்கள்’ குறித்து மறுபரிசீலனை செய்து கொள்வதுஅவசியம் என்றே நான் கருதுகிறேன்.
இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கென்று தனியாகஓர் அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் என்பது பொதுவாக இருந்து வருகின்றதவறான கருத்தாகும். முஸ்லீம்லீக்கின் அடிப்படை நோக்கம் பிரிவினை நோக்கியதாக இருக்கவில்லை. 1916ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லீம்லீக்கின் தலைவரான நாள் முதலாகவே ஜின்னாவின் குறிக்கோள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தைப் பெறும் வகையிலே தனியாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் அனைத்து சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்து வந்தது. அதனாலேயே அவர் முஸ்லீம்லீக்கின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் காங்கிரஸ் உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து வந்தார். முஸ்லீம்லீக் துவக்கப்பட்டு இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1940 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட கட்சியின் லாகூர் தீர்மானம் (உலகளவில் அது ‘பிரிவினைத் தீர்மானம்’ என்றே கருதப்படுகிறது) ‘மிகப்பெரிய இந்திய கூட்டமைப்பிற்குள் தன்னாட்சி கொண்ட அல்லது பகுதியளவில் சுதந்திரமான முஸ்லீம் பெரும்பான்மை பகுதியை உருவாக்குவது’ என்று மட்டுமே இருந்தது. உண்மையில் அந்த தீர்மானம் ஜின்னாவின் விருப்பமாக மட்டும் இருக்கவில்லை. பஞ்சாப் (அப்போது தில்லியில் இருந்துகைபர் கணவாய் வரை) மற்றும் வங்காளம் என்று அப்போதுநாட்டில் இருந்த இரண்டு பெரிய முஸ்லீம் பெரும்பான்மைமாகாணங்களின் விருப்பமாகவும் அது இருந்தது.
ஹயாத் கான், சுரவர்த்தி
பஞ்சாபில் அகாலிகள் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து யூனியனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது.சர் சிக்கந்தர் ஹயாத் கான் இறந்து போகும் வரை யூனியனிஸ்ட் கட்சி அவராலேயே வழிநடத்தப்பட்டு வந்தது. தேசப்பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார்.பஞ்சாப் மற்றும் யூனியனிஸ்ட் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்பதால் அவர் பிரிவினையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தொகுதிகளில் முஸ்லீம்லீக் கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதிலும், அந்த மாகாணத்தில் யூனியனிஸ்ட் கட்சிதான் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்து வந்தது.
வங்காளத்திலும் தேசப்பிரிவினைக்கு கூடுதலான எதிர்ப்பு இருந்து வந்தது. அங்கே பிரதம அமைச்சராக இருந்த ஹெச்.எஸ்.சுரவர்த்தி முஸ்லிம்லீக்கின் உறுதியான தலைவர். முஸ்லீம்களால் ஆளப்படும் பகுதிகளில்பஞ்சாப், வங்காளம் ஆகியவை முக்கிய பகுதிகளாக இருக்கின்ற வகையில் உருவாக்கப்படும் இந்திய கூட்டமைப்பு என்ற ஜின்னாவின் பார்வையையே சுரவர்த்தியும் கொண்டிருந்தார்.மவுண்ட்பேட்டன் பிரபு 1947 ஏப்ரலில் வெளியிட்ட இடைக்காலப் பிரிவினைத் திட்டம் பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டு பகுதிகளையும் பிரிப்பதாக இருந்தது. அந்த திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சுரவர்த்தி சுதந்திரமான ஐக்கிய வங்காளம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். தில்லியில் ஏப்ரல் 27 அன்று ஆற்றியபரபரப்பான உரையில் அவர் ‘பிளவுபடாமல் ஒன்றாகஇருந்தால் வங்காளம் எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மிகச் சிறந்ததொரு நாடாகஇருக்கும் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமானவர்களால் இந்திய மக்களுக்கு உயர்ந்தவாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும். அதன் மூலம் பெரும்பான்மையான மக்கள் தங்கள் அந்தஸ்தில் முழுமையாக உயர முடியும்...’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது உரையில் இருந்த ‘இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமானவர்கள்’ என்ற சொற்றொடர்குறிப்பிடத்தக்கதொரு சொற்றொடராகவே அமைந்திருந்தது. அந்தச் சொற்றொடர் சுரவர்த்தி வாய்தவறிச் சொன்னதாக இல்லாவிடில், வங்காளம் தனி அரசாக உருவாக்கப்படுவதை அவர் முன்மொழியவில்லை என்றே பொருள்படும். அதுவரையிலும் வரையறுக்கப்படாததாக இருந்த இந்திய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்ஐக்கிய வங்காளத்தையே அவர் விரும்பினார். அவரது முன்மொழிவிற்கு எதிராக காங்கிரஸிலிருந்து எந்தவிதக்கலகக் குரலும் எழவில்லை என்பதுவும்குறிப்பிடத்தக்கது.
வங்காளத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் சந்திர போஸ், கிரண் சங்கர் ராய் போன்ற பலரும் சுரவர்த்தியின் முன்மொழிவு ஆதரிக்கப்படுவதற்கான தகுதியுடன் இருப்பதாகவே உணர்ந்தனர். வங்காள ஆளுநராக இருந்த சர் ஃப்ரெட்ரிக் பர்ரோஸ் இந்தியாவின் மூன்று ஆட்சிப் பகுதிகளில் ஒன்றாக வங்காளத்தை தனித்த தன்னாட்சிப் பகுதியாக உருவாக்குவதை முன்மொழியத் தொடங்கிய பின்னரே காங்கிரஸ் அதை எதிர்த்தது. அப்படியானால் அடுத்தடுத்து நடந்த படுகொலைகளைத் தூண்டியது எது? ‘பாகிஸ்தான்’ உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லீம்லீக் தொடங்கியதீவிரப்படுத்தப்பட்ட ‘நேரடி நடவடிக்கை’ அதாவது இனசுத்திகரிப்பு பிரச்சாரம் என்பதே அந்தக் கேள்விக்கான உடனடியான பதிலாக இருக்கும். அந்த நடவடிக்கைக்கான கருவியாக 1931ஆம் ஆண்டில் முஸ்லீம்லீக்கின் இளைஞர் பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லீம்லீக் தேசிய காவலர்படை என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அமைப்பிற்கு 1946ஆம் ஆண்டு லாகூரில் நடந்த லீக் ‘கமிட்டி ஆஃப் ஆக்சன்’ கூட்டத்தில் வேறுவிதமான கொலைகார நோக்கத்துடன் புத்துயிர் தரப்பட்டது.
கட்டுரையாளர் : பிரேம் சங்கர் ஜா
தொடர்ச்சி.... நாளை