districts

விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறு இடதுசாரி கட்சியினர் தொடர் மறியல் - கைது

சேலம், டிச.4–  

மத்திய மோடி அரசின் விவசாய விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். விவசாய விரோத மசோதாக் களை மத்திய அரசு திரும்பப் பெற  வேண்டும். போராடும் விவசாயி களை அழைத்துப் பேசி தீர்வு காண  வேண்டும். அவர்கள் மீது ஏவப்ப டும் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என  முடிவெடுக்கப்பட்டு மாநிலம் முழுவ தும் போராட்டம் நடைபெற்று வருகி றது. அதன் ஒரு பகுதியாக, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சிபிஎம் மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோரது தலைமையில் ஆவேசமிகு மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குண சேகரன், ஞானசௌந்தரி, மேற்கு மாந கர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு  மாநகர செயலாளர் என்.பிரவீன்கு மார், ஓமலூர் தாலுகா செயலாளர் பி.அரியா கவுண்டர், சிபிஐ (எம்எல்) நிர்வாகி அய்யந்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசை  கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், குமரன் சாலை யில் அமைந்துள்ள வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தின் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோரது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி, ஆர்.குமார், டி.ஜெய பால் உள்பட கட்சியின் முன்னணி  ஊழியர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா ளர் சி.பழனிசாமி, பொருளாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்பட ஊழியர்களும் கலந்து கொண்டு கைதாகினர்.

இதேபோல் சின்னவீரம்பட்டி, திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யம் உள்ளிட்ட இடங்களில் விவசாயி களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய  விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் பஞ்சலிங்கம், ஓய்வூதியர் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி யம், கிளைப் பொருளாளர் வி.தண்ட பாணி, கிளைத் துணைச் செயலாளர் பழனிவேல்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லி பாபு தலைமை வகித்தார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன், மாநிலக் குழு உறுப்பினர் சின்னசாமி, மாதேஸ்வரன், சிபிஐ (எம்எல்) மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, பி.இளம்ப ரிதி, எஸ்.கிரைஸாமேரி, நகர செயலா ளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலா ளர்கள் நல்லம்பள்ளி கே.குப்புசாமி, தருமபுரி  என்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைய டுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரை யும் போலீசார் கைது செய்தனர்.  

நீலகிரி

நீலகிரி மாவட்டம்,  எருமாடு பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் நடத்திய மறியல் போராட்டத்தில் எருமாடு இடைக்கமிட்டி  செயலா ளர் கே.ராஜன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் ஏ.யோகண் ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.எம்.ஹமீத் மாஸ்டர், டி.ஏ.சாந்தா,  மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.அனீபா மாஸ்டர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பன்னீர் செல்வம், விவசாயிகள் சங்க இடைக்கமிட்டி  தலைவர் ராம தாஸ், செயலாளர் டி.கே.பிலிப் உள்ளிட்ட ஏராளமானேர் பங்கேற்று கைதாகினர்.
 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், முள்ளுகு றிச்சி மற்றும் மெட்டாலாவில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் சின்ன சாமி, ஒன்றிய செயலாளர் பழனிச் சாமி, விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு மாவட்ட கன்வீனர் பி.பெருமாள், திமுக விவசாய அணி  ஒன்றிய செயலாளர் என்.அய்யா துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தின் மாவட்ட பொருளாளர் செல்வ ராஜ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் சரவணன், தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாகினர்.  

ஈரோடு

ஈரோடு தலைமை தபால் நிலை யம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு ஆகியோரது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரி முத்து, சி.பரமசிவம், ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரவி, க.ராஜ்குமார், எச்.ஸ்ரீராம், பி.எஸ்.பிரசன்னா, ஆ.சகாதேவன், கே.சண்முகவள்ளி, பா.லலிதா, சிபிஐ  மாவட்ட பொருளாளர் எஸ்.டி.பிரபா கரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.எம்.துளசிமணி, ஏஐடி யுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னச் சாமி, சிபிஐ ஈரோடு வட்டச்செய லாளர் சோமசுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் சி.பூபதி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்டம் பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியம் சின்ன தடா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பால மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;