districts

img

70 அடியை நெருங்கும் மேட்டூர் நீர் அளவு

சேலம், டிச.9- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2,510  கன அடியாக இருந்த  நிலையில், சனிக்கிழமை யன்று காலை 3,297 கன  அடியாக அதிகரித்துள் ளது. 

அணையின் நீர் மட்டம் 68.22 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 31.19 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கிழக்கு மற்றும்  மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டி ருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன  அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.