districts

img

மயக்க மருந்து மருத்துவரின் பணி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு சமமானது தெற்கு ரயில்வே தலைமை இயக்குநர்

சென்னை, செப். 17- மயக்க மருந்து மருத்துவரின் பணி ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் பணிக்கு சமமானது என இந்திய ரயில்வே தலைமை மருத்துவ இயக்குனர் தெரிவித்தார். இந்திய ரயில்வே மயக்க மருந்து மருத்து வர்களின் 28ஆவது ஆண்டு மாநாடு ஐசிஎப்பில் உள்ள ஆவ்தி அரங்கில் சனிக்கிழமை (செப். 17) நடைபெற்றது. இந்திய ரயில்வே மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் மருத்துவர் பிரசன்ன குமார் பேசுகையில், மயக்க மருந்து மருத்து வம் அறுவை சிகிச்சையின் போது பணியாளர்கள் மரணமடையும் எண்ணிக் கையை பெருமளவில் குறைத்துள்ளது என்றார். கொரோனா பேரிடர் காலத்தில் மயக்க நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்களின் சேவை பெருமளவில் தேவைப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து மருத்துவர்களின் பணி அறுவை சிகிச்சை நிபுணர்களின் பணிக்கு சற்றும் குறைந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஐசிஎப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால்  பேசுகையில், அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மயக்க  மருந்து நிபுணர்களின் பணி மிக முக்கிய மானது என்றார். மேலும் கடந்த 27  ஆண்டுகளாக இதுபோன்ற கருத்தரங்கங் கள் நடத்தி மயக்க மருந்து நிபுணர்கள்  தங்களது துறை சார்ந்த அறிவை மேம்படுத் திக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா பேசுகையில், பல் அறுவை  சிகிச்சை போன்ற சிறிய அறுவை சிகிச்சைக ளின் போது கூட மயக்க மருந்து நிபுணர்க ளின் பணி தேவைப்படுகிறது என்றார். முன்னதாக ஐசிஎப் தலைமை முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஏ.ராஜேஸ்வரி வரவேற்றார். விழா அமைப்புக் குழு செயலாளர் மருத்துவர் ஆர்.பிரசன்ன குமார் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற மயக்க மருந்து மருத்துவர் சும்கி தத்தாவுக்கு டாக்டர் எம்.சி.பன்வர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ரயில்வே மற்றும் முக்கியமான புகழ் பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

;