districts

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை போலியான தகவல்களை நம்பாதீர்

சென்னை,மே 11-  

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதி காரப்பூர்வமற்ற இணையதள வேலை வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது.     இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறு வனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியா ளர்கள் தேவையின் போது அதற்கான  முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் அறிவிப்புகள் வெளியிட ப்படுகின்றன.  

   எனவே, வேலைவாய்ப்புக்குத் தகுதி யுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகா ரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறி விப்புகளில் இருந்து தெரிந்து கொள்ள லாம். இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளி வரும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான இணைய தளத்தில் வெளியாகும்  செய்தி களை, விளம்பரங்களை நம்பி அதிகார பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப் பேற்காது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.