வேலூர், ஜூலை 26- வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் ஸ்மார்ட் மொபி லிட்டி பாடத்திட்டம் உருவாக்க விஐடியு டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விஐடி மாணவர்களுக்கு வால்வோ நிறு வனம், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஸ்மார்ட் மொபிலிட்டி, பாடத்திட்டம் தயாரிப்பதில் வால்வோ முக்கிய பங்கு வகிக்கும். மேலும் வால்வோ குரூப் இந்தியா அறக்கட்டளை, விஐடியில் பி.டெக் பயிலும் 5 மாணவிகளுக்கு, 4 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணத்தில் முழு செலவையும், ஏற்கும். பி.டெக் - இயந்திர பொறியியல் , எலக்ட்ரிக் வாகனங்கள், அல்லது பி.டெக். இயந்திர பொறியியல் உற்பத்தி பொறியி யல் பாடங்கள் பயிலலாம். விஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி நிறுவனர் வேந்தர் டாக்டர் கோ.விசு வநாதன், வால்வோ குரூப் இந்தியா இயக்கு நர் ஜி.வி. ராவ், விஐடி துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.