districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் கிளை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் கிளை சார்பில் இலவச சிலம்பம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிறன்று (பிப்.18) நடைபெற்றது. பேரா ஆர்.காளீஸ்வரன், திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டம் கழக மாவட்டச் செயலாளர் ஹரிதாஸ், சங்கத்தின் பகுதிச் செயலாளர் மணிமாறன், துணைத் தலைவர் ராஜ்குமார், கிளை தலைவர் நிரஞ்சனா, செயலாளர் ஆகாஷ், இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.