புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
சென்னை, மார்ச் 18- ஐக்யூஓஓ நிறுவனம் தனது இசட் மாடல் வரிசை யில் புதிய ஐக்யூஓஓ இசட்9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையானது அமே சான். இன் மற்றும் ஐக்யூஓஓ இ-ஸ்டோரில் துவங்கி உள்ளது. சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஐக்யூஓஓ விவோவின் துணை நிறுவனமாகும். சோனி ஐஎம்எக்ஸ் 882 பின்புற கேமராவுடன், ஓஐஎஸ் திறனுடன் கூடிய 4கே வீடியோ பதிவு மற்றும் 1800 நிட்ஸ் அதிகபட்ச பிரகாசத்துடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் அமோல்டு டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 8ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் கூடிய இந்த போன் விலை ரூ.17,999 லிருந்து தொடங்கு கிறது.
வழக்கத்திற்கு மாறான பண பரிமாற்றம் கணக்கு தெரிவிக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி திருவள்ளூர், மார்ச் 18- மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வங்கியாளர்களுடன் பொதுவான நடத்தை விதிமுறைகள் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் செயல்பாட்டின் போது எந்தவொரு தனிப்பட்ட நபரின் வங்கிக்கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுப்பது குறித்து அனைத்து வங்கிகளை யும் தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் இருந்து வழக்கத்திற்கு மாறான மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால் கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் செயல்பாட்டின் போது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மாவட்டம் தொகுதியில் உள்ள பல நபர்களின் கணக்கிற்கு RTGS மூலம் வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றம்.வேட்பாளர்கள் அல்லது மனைவி அல்லது அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக கணக்கி லிருந்து ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க வைப்பு அல்லது பணம் எடுத்தல், தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் அதிக அளவு பணம் திரும்பப் பெறப்பட்டால் அவசியம் நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையைப் பற்றிய தகவல்கள் வருமான வரித் துறையின் நோடல் அதிகாரிக்கு அனுப்பப்படும். வருமான வரி சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வலியுறுத்தினார்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னை,மார்ச் 18- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 49,720 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,090 விற்பனை செய்யப்படு கிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,480 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,560 ஆகவும் விற்பனை யாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 க்கு விற்பனையாகிறது.