districts

img

பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

கடலூர், ஏப்.24- கடலூர் முதுநகர் அருகே சிப்காட் வளாகத்தில் உள்ள ஹுயூபெக் ரசாயன தொழிற்சாலையில் புதனன்று திடீரென தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   முதுநகர் அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட ரசாயனம் மற்றும் மருந்து தொழிற்சாலைகள் இயங்கி வரு கின்றன. இந்நிலையில் எந்த முன்ன றிவிப்பும் இன்றி இங்கு வேலை பார்த்து வந்த 5 தொழிலாளர்களை நிர்வாகம் மும்பைக்கு பணியிட மாற்றம்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தது. இதுகுறித்து தொழி லாளர் நல அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படை யில் விசாரணை நடைபெற்று வரு கிறது. பின்னர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலை யிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ஆலை நிர்வாகத்தின் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப் பட்டது.  இந்த நிலையில், புதனன்று காலை தொழிலாளர்கள் பணிக்கு சென்ற போது, திடீரென 5 தொழி லாளர்களும் மும்பையில் உள்ள தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் சிப்காட் தொழிற்சாலைக்குள்ளும் அனுமதிக்கவில்லை.  இதனை கண்டித்து அனைத்து தொழிலாளர்களும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியு, எல்எப்எப், தொமுச, தொழிற்சங்கத்தின் பங்கேற்றனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து புதுப்பாளையத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகம் முன்பு புதனன்று இந்த பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு காவல்துறை யினர் ஏற்பாடு செய்தனர். நிர்வாகமும் ஒத்துக்கொண்டது. ஆனால் தொழிலாளர்களும், காவல்துறையினரும் தொழிலாளர் அலுவலகத்தில் மாலை வரை காத்தி ருந்தும் நிர்வாகத்தின் தலைப்பில் யாரும் வராததால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. இதனையடுத்து மீண்டும் தொழிற்சாலை வாயி லில் போராட்டம் நடத்தப் போவ தாக தொழிற்சங்கத்தினர் அறி வித்துள்ளனர். இது குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் பி.கருப்பையன் கூறுகையில், ஆலைநிர்வாகம், தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்ததற்காக திட்டமிட்டு பழி வாங்குகிறது.  இதுவரையில் இந்த தொழிற்சாலையில் பணி மாற்றம் என்பதே கிடையாது.  மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவரிடம் ஒத்துக் கொண்டு பின்னர் அதனை அமல்படுத்த மறுக்கின்றனர். எனவே இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடும் என்று தெரிவித்தார். குறைந்து கூலிக்கு வேலைசெய்யும் தொழிலாளியை அதே சம்பளத்தில் மும்பைக்கு பணி மாற்றம் செய்தால் நிர்வாகம் கொடுக்கும் ஊதியத்தில் வீட்டு வாடகை கூட தர முடியாது என்று தெரிவித்தார்.